×

சீர்காழி பகுதியில் சோளம் சாகுபடி தீவிரம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சோளம் தீவிர சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சீர்காழி அருகே செம்பதனிருப்பு காத்திருப்பு அள்ளி விளாகம் ராதாநல்லூர் இளைய மதுகூடம் நடராஜபிள்ளை சாவடி, திருவாலி நாங்கூர், புதுத்துறை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் சோளம் பயிரிட்டு நன்கு வளர்ந்து சோளம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு ஏக்கரில் சோளம் பயிரிட ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகும் என்றும், ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் எனவும், இந்த ஆண்டு சோளம் நல்ல மகசூலை தந்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சோளத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் நோயிலிருந்து பாதுகாக்கும் சோளத்தில் கரோட்டின் இருப்பதால் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. தற்போது சோளம் மக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ குணம் கொண்ட சோளம் சீசனில் மட்டுமே கிடைப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் குழந்தைகள் வரை சோளத்தை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்….

The post சீர்காழி பகுதியில் சோளம் சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai district ,Radhanallur ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சொந்த செலவில் கல்வி உபகரணங்கள்