×

பென்னாகரம் பகுதியில் 50 சிசிடிவி கேமரா ெபாருத்தம்

பென்னாகரம், செப்.26: பென்னாகரம் பகுதியில், குற்றச்சம்பவங்களை தடுக்க 50 சிசிடிவி பொருத்தப்பட்டது. இதை டிஎஸ்பி தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 50 கேமரா வைத்து தீவிர கண்காணிப்பு பணி பென்னாகரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேகலா தொடங்கிவைத்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், விதிமுறை மீறும் வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் குற்றசம்பவங்களில் ஈடும் நபர்களை கண்காணிக்க பொது மக்கள் ஒத்துழைப்போடு ₹15 லட்சம் மதிப்பில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பென்னாகரம் 4 ரோடு பகுதி, ஒகேனக்கல் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் 8 கேமராக்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட ஐபி கேமராக்கள் ஆகும்.

இக்கேமராக்களின் செயல்பாட்டை நேற்று பென்னாகரம் டிஎஸ்பி மேகலா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக பென்னாகரத்தில் உயர் தொழில்நுட்ப கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேமராக்கள் உதவியால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் வாகனங்களில் பதிவு எண்களை எளிதாக கண்காணிக்க முடியும். அதே போல் பென்னாகரம் வனப்பகுதியில், சமூக விரோதிகளை கண்காணிக்க இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும். என போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணியை 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் போது பென்னாகரம் இன்ஸ்பெக்டர் பெரியார். போக்குவரத்து துறை எஸ்ஐ காவேரிப்பன், ஞானதி, பென்னாகரம் எஸ்ஐ மாரி, மதியழகன், சென்றாய பெருமாள், அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Pennagaram ,area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...