×

கடத்தூர் பகுதியில் முள்ளங்கி சாகுபடி தீவிரம்

கடத்தூர், செப்.26: கடத்தூர் பகுதியில், முள்ளங்கி  சாகுபடி தீவிரமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒடசல்பட்டி, மணியம்பாடி, சில்லரஹல்லி, புட்டிரெட்டிபட்டி, ராமியணஅள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி பயிரிடப்படுகிறது. முள்ளங்கி மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளதால், இதை பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றி விவசாயிகள் கூறுகையில், முள்ளங்கியில் நீர்சத்து அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பொதுவாக 40 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஏக்கருக்கு ₹5000 முதல் 7000 வரை செலவாகிறது. மேலும் 40 நாளில் ஏக்கருக்கு ₹30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். மற்ற பயிர்களை விட, முள்ளங்கி பயிரிட தண்ணீர் தேவை குறைவு என்பதால், முள்ளங்கி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கிலோ ₹10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Kadathur Area ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா