×

என்ஹெச் சாலை 8 வழி சாலையாக மாற்ற வேண்டும் மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி மனு

தர்மபுரி, செப்.26: தர்மபுரி மாவட்ட வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக மாற்ற மத்திய அமைச்சரை தர்மபுரி எம்பி செந்தில்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்தித்தார். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை எண்44 ஐ நான்கு வழிச்சாலையில் இருந்து 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், இந்தியாவின் மிக நீண்ட சாலையான என்ஹெச்& 44  கடந்து செல்கிறது. இச்சாலையில் காரிமங்கலம்-அகரம் கூட்டுரோடு, குண்டல்பட்டி தர்மபுரி சந்திப்பு சாலை ஆகிய பகுதிகளில் அதிக சாலைவிபத்து நடக்கிறது. இந்த சாலை விபத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உயிரிழப்பை தடுக்க உடனடியாக மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். மிக நீண்ட கால கோரிக்கையான- தொப்பூர் கணவாய் மலைப்பகுதியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.

தொப்பூர் மலைப்பகுதி பாதை முழுவதையும் சீரமைக்க வேண்டும். அதே போன்று பாளையம்புதூர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே பாளையம் கூட்ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி முதல் சேலம் வரை தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலை 44 ஐ விரிவுப் படுத்தி 8 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.    இயற்கை வளங்களை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலை நடுவே குறுவகை மரங்களை நடுவதற்கு -தர்மபுரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறுவகை மரம் நட முன் மாதிரி திட்டமாக அறிவிக்க வேண்டும். அதிக கனரக வாகனங்கள் செல்லும் தொப்பூர் முதல் பவானி வரையிலான மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி அதை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக மனு அளிக்கப்பட்டது. மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சர் இந்த கோரிக்கைகளை உடனடியாக பரிசிலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமாரிடம் உறுதி அளித்தார்.

Tags : DMK ,NH Road ,Union Minister ,road ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி