×

சம்பா பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் வேளாண் அதிகாரி தகவல்

லால்குடி, செப்.26: லால்குடி பகுதியில் சம்பா பயிர் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானிய விலையில் நடப்பு சம்பா பருவத்திற்கு ஏற்ப சான்று பெற்ற உயர்விளைச்சல் ரகமான டி.கே.எம் 13 நெல் விதை வாளாடி, புதூர்உத்தமனூர், லால்குடி, அன்பில், ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டி.கே.எம் 13, காவேரி டெல்டா பகுதிக்கு ஏற்ற 130 நாட்கள் வயதுடைய ரகம் மத்திய சன்ன வெள்ளை அரிசி, அதிக அளவை திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் உடையது. சமைத்த சாதம் நீளும் தன்மை அதிகமாகவும், சிறந்த சமையல் பண்புகள், சுவையும் உடையது. இலை சுருட்டு புளு, குருத்து பூச்சி, பச்சை தத்து பூச்சி, குழைநோய், துங்குரோ நோய், செம்புள்ளி நோய், இழை உறை அழுகல் நோய்களுக்கு நடுத்தர எதிர்ப்பு திறன்கொண்டது. 1 ஹெக்டேருக்கு 5 ஆயிரத்து 938 கிலோ மகசூல் தரவுள்ளது. மேலும் பயிர்களுக்கு தேவையான திரவ உயிர் உரங்கள், அசோஸ் பைரில்லம் மற்றும் நுண்ணூட்ட உரங்களும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

சம்பா பயிரிடும் மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாய் நாற்றங்கால் அமைத்து நெல் இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2 ஆயிரம் மானியமாகவும், அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை பின்னேற்பு மானியமாக விவசாயிகள் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட உள்ளது.  லால்குடி வட்டார பகுதி விவசாயிகள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என உதவி வேளாண் இயக்குனர் ஜெயராணி
தெரிவித்துள்ளார்.

Tags : Samba ,growers ,
× RELATED சம்பா, தாளடி பருவத்தில் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்