×

மல்லிகை பருவம் இல்லாத காலங்களில் மலர் உற்பத்தி அதிகரிக்க தொழில் நுட்ப பயிற்சி

திருச்சி, செப்.26: திருச்சி சிறுமணியில் வேளாண் அறிவியல் நிலையத்தில் மல்லிகை பருவம் இல்லாத காலங்களில் மலர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. மல்லிகையில் கவாத்து செய்தல், தாவர வளர்ச்சி ஊக்கிகளை கொண்டு உற்பத்தியை பெருக்குதல், ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை, களைக்கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரித்தல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான், வேளாண் அறிவியல் உதவி பேராசிரியர் தனுஷ்கோடி, பயிற்சி அலுவலர் சரண்ராஜ், பேராசிரியர் கலைமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : absence ,
× RELATED ஸ்ரீநகர் பனிப்பொழிவு, நிலச்சரிவில்...