×

எம்பி திருச்சி சிவாவிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு

திருச்சி, செப்.26: திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தினர் எம்.பி., திருச்சி சிவாவிடம் மனு அளித்தனர். இந்த மனுவில், திருச்சி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ரயிலில் ஏறுவதற்கான கைவண்டி மற்றும் வாகனத்தை நிறுத்திவிட்டு நடைமேடைக்கு செல்வதற்கான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

ரயில் நிலையத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நான்கு சக்கர பேட்டரி வாகனம் முதலியவற்றிற்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே நிர்வாக அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென இயங்கிக்கொண்டிருந்த தனிப்பட்ட கூடுதல் பெட்டிகளை திடீரென ரயில்வே நிர்வாகம் அகற்றியது. இதனால் மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணிக்க பெரும் அவதிப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : petitioners ,MB Trichy ,
× RELATED அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்