×

சவுதியில் டாக்டர், நர்ஸ், பிசியோதெரபிஸ்ட், டெக்னிஷியன் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி, செப்.26: சவுதி அரேபிய நாட்டில் ஜுபைலில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு 35 வயதிற்க்குட்பட்ட டிப்ளமோ, பி.எஸ்.சி., படித்த ஆண் செவிலியர்கள் மற்றும் 40 வயதிற்க்குட்பட்ட 2 வருட பணி அனுபவமுள்ள பி.எஸ்.சி படித்த ஆண் பிசியோதெரபிஸ்ட் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். மேலும், 40 வயதிற்க்குட்பட்ட பெண் லேப் டெக்னிசியன், எக்ஸ்ரே டெக்னிஷியன், சோனோகிராபி டெக்னிசியன், எம்டி தேர்ச்சியுடன் ஆண்/பெண் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்திட்டத்திற்க்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ளவர்கள் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம் (இன்டகிரேடட் எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் காம்ப்ளக்ஸ்), எண்.42, அலுந்தூர் ரோடு, திருவிக தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032 என்ற முகவரியில் நேரிலோ 0091-44-22502267, 22505886, 22500417, பேக்ஸ் 0091-44-22500416 என்ற எண்ணிலோ, தொடர்பு கொண்டு தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச்சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.com மற்றும் 044-22505886, 22500417, 8220634389 என்ற எண்களின் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Doctor ,Nurse ,Physiotherapist ,Technician ,Saudi ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...