×

காங்கிரஸ் முடிவு பாபநாசம் பகுதியில் தொடர் மழை காலி மனைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்

பாபநாசம், செப். 26: பாபநாசம்- சாலியமங்கலம் செல்லும் சாலையில் குப்பைமேடு பகுதியில் காலி மனைகள் உள்ளது. இந்த பகுதியில் சமீபத்தில் பெய்து வரும் மழையால் காலிமனைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் பரவக்கூடிய அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதி காலி மனைகளில் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடியாமல் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று வியாதிகள் பரவும் நிலையில் உள்ளது. காலிமனைகளில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : spread ,area ,Papanasam ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...