×

நாட்டுரக பறவை உற்பத்தி பயிற்சி 50 விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

கும்பகோணம், செப். 26: கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் வட்டார வேளாண்மை துறை அட்மா திட்டத்தின்கீழ் நாட்டுரக பறவை உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து வெளிமாவட்ட கண்டுணர்வு சுற்றுலாவுக்கு 50 விவசாயிகள், புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் கால்நடை மருத்துவ பேராசிரியர் ஷீலா தலைமை வகித்து தொழில்நுட்ப கருத்துக்களை விளக்கி பேசுகையில், விவசாயிகள் தரமான நாட்டுரக பறவையை உற்பத்தி செய்து நல்ல தலைமுறைகள் முட்டை மற்றும் கறிக்காக பயன்படுத்த முடியும் என்றார்.

மேலும் நாட்டுரக பறவையில் அமைந்துள்ள சத்துக்கள், வயிற்றுப்போக்கு, தட்டம்மை, நீர் பாதை மற்றும் கால்முடக்கம் உள்ளிட்ட நோய்கள் வராமல் பாதுகாத்தல், கட்டுப்படுத்தும் காரணிகள் தடுக்கும் வழிமுறை குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சாந்தகுமாரி, ரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED தி.க. கலந்துரையாடல் கூட்டம்