பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் சுப்ரமணியன் ஆலோசனை

விழுப்புரம், செப். 26: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் சுப்ரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஆட்சியர் சுப்ரமணியன் பேசியதாவது: அங்காளம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும். போக்குவரத்துத் துறை மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்திட வேண்டும்.

மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்ய வேண்டும், விழாக்காலங்களில் இரண்டு நாட்களிலும் மும்முனை இணைப்பு மின்சாரம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோயிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் திருக்கோயில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் சிசிடிவி மூலம் கண்காணிக்கவும், பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் அவசர ஊர்திகள் திருக்கோயில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாசிங், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Subramanian ,
× RELATED நாசா உதவியுடன் விக்ரம் லேண்டரை...