வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் மீனவர் தற்கொலை

புதுச்சேரி, செப். 26:  கப்பல் விபத்தில் கால்களில் அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.புதுவை முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் அய்யனார் கோயில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). மீனவர். திருமணம் ஆகாதவர். வெளிநாட்டு கப்பலில் மீன்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கப்பல் விபத்தில் சதீஷ்குமாருக்கு 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு மூட்டுமாற்று ஆபரேசன் ெசய்து பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

 அதன்பிறகு அவரால் சரிவர நடக்க முடியவில்லை, வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சதீஷ்குமார், நேற்று முன்தினம் மின்விசிறியில் லுங்கியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மைத்துனர் பரதன் (44) அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>