×

மாற்று இடம் வழங்காததை கண்டித்து சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை

சிதம்பரம், செப். 26: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் தில்லைக்காளியம்மன் கோயில் அருகே உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதையடுத்து இந்த நீர் நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் அதிரடியாக அகற்றப்பட்டது. இதில் வாகீசநகர், பூதகேணி, தில்லையம்மன் கோயில் தெரு, கோவிந்தசாமி தெரு, குமரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டிருந்த 350க்கும் மேற்பட்ட விடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து இப்பகுதியில் வீடுகள் இழந்த பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் வீடுகள் இடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் மாற்று இடம் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்றுமுன் தினம் திரண்டு வந்து சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் தவாக மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமையில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாசை சந்தித்து மாற்று இடம் வழங்க கோரி மனு அளித்தனர்.

Tags : Chidambaram ,office ,
× RELATED சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி