×

திருத்தணியில் ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பாரபட்சம் காட்டக்கூடாது

திருத்தணி, செப். 26: திருத்தணி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், திருத்தணி ஒன்றிய பராமரிப்பில் உள்ள ஜோதி நகரில் உள்ள ஏரியும் நிரம்பியது.  அதன் கரைகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால், அதன் மதகை  உடைத்து விட்டனர். இதனால்  வெளியேறும் தண்ணீர் புதூர் கிராமம் வழியாக அரக்கோணம் வட்டம் கீழாத்தூர் ஏரிக்கு சென்றடைகிறது. மேலும், ஏரிக் கால்வாயை  அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து விட்டதாக தெரிகிறது.  இதனால் கீழாத்தூர் ஏரிக்கு தண்ணீர் செல்லாமல் வீணாக நந்தி ஆற்றில் கலக்கிறது.

இதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கால்வாயை தூர்வார முற்பட்டனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால்  ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் வெளியேறினர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருத்தணி ஒன்றியம் பராமரிப்பில் உள்ள ஜோதி நகர் ஏரி தண்ணீரால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன் அடைந்து வருகின்றனர்.  கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாததால் ஏரி வறண்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமலும், குடிக்க தண்ணீர் இல்லாமலும் அவதிப்பட்டோம். எனவ  மாவட்ட கலெக்டர், பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு