×

மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம், வெண்கலம் வென்றவர்களுக்கு வரவேற்பு

திருவொற்றியூர்:  மலேசியாவில்  உலகளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு மணலி பகுதியில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில்  5வது உலகளாவிய  கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி கடந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடந்தது. இதில் இந்தியா, மலேசியா சவுத் ஆப்பிரிக்கா, ரஷ்யா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய 52  நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இந்தியாவில் சென்னையில் இருந்து 52 பேர் கலந்துகொண்டனர். இதில் மணலியை சேர்ந்த அஸ்விதா என்ற 9ம் வகுப்பு மாணவி தங்க பதக்கம் பெற்று முதலிடம் பிடித்தார். அதேபோல் மணலியை சேர்ந்த  காமேஷ், வீரேஸ்வரன் ஆகிய இரண்டு மாணவர்கள் வெண்கலப் பதக்கம் வென்று 4வது இடத்தை பிடித்தனர். கராத்தே போட்டியில் பங்கேற்று பயிற்சியாளர் குப்புசாமியுடன் நாடு திரும்பிய  தங்கம் மற்றும்  வெண்கலம் வென்ற மூன்று வீரர், வீராங்கனைகளுக்கு மணலியில் பெற்றோர்களும், பள்ளி மாணவர்களும் பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.

Tags : winners ,Malaysia ,International Karate Competition ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...