×

ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 2019-20ம் ஆண்டுக்கு 106 சிறுபாசன ஏரி 872 குட்டை, ஊரணிகள் தூர்வார இலக்கு

ஜெயங்கொண்டம், செப்.26: ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 2019-20ம் ஆண்டுக்கு 106 சிறுபாசன ஏரி, 872 குடடை, ஊரணிகள் தூர்வாரி சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வினய் தெரிவித்தார்.ஜெயங்கொண்டம் அருகே பொன்னேரியில் ரூ.2.46 கோடியில் குடிமராமத்து திட்ட பணிகள் பாசனதாரர்கள் சங்கம் மூலம் நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் வினய் ஆய்வு செய்தார். இதில் 10 பணிகள் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 பணிகள் மழைநீர் தேங்கியுள்ளதால் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 783 மி.மீ அளவு மழை பெய்துள்ளதால், ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்பட்டு, விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கலெக்டர் வினய் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் ரூ.4.5 லட்சம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.1.5 லட்சம் மதிப்பிலும் பனைமர விதைகள் நடுவதற்கு தமிழக முதல்வரின் ஆணையின்படி தரிசு நிலங்கள், ஏரி, குளங்களின் கரைகளில் மரக்கன்றுள் நடும் பணிகள் நடந்து வருகிறது. ஊரக வளர்ச்சித்துறையின்கீழ் 2019-20ம் ஆண்டுக்கு 106 சிறுபாசன ஏரிகள், 872 குட்டை, ஊரணிகள் தூர்வாரி புனரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறுபாசன ஏரிக்கு தலா ரூ.5 லட்சம், குட்டை, ஊரணிகள் புனரமைப்புக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு நடந்து வருகிறது.700 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியை கொண்ட பொன்னேரி கரையை கிராவல் மண் நிரப்பி கரைகள் பலப்படுத்துவதால் ஏரியில் உள்ள நீர் ஆதாரத்தை கொண்டு 1,374 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பொன்னேரியை சுற்றி குடிநீர் ஆதாரமான நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது என்றார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் ராஜாசிதம்பரம் மற்றும் பாசனதாரர் சங்க உறுப்பினர்கள், ஒன்றிய ஆணையர்கள், விவசாயிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags : smallpox lake ,Rural Development Department ,
× RELATED பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் இங்கிலாந்துக்கு 277 ரன் இலக்கு