×

கீழக்கரை கிராமத்தில் நாளை சிறப்பு திட்ட முகாம்

பெரம்பலூர், செப். 26: கீழக்கரை கிராமத்தில் சிறப்பு திட்ட முகாம் நாளை நடக்கிறது.இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு திட்ட முகாம் நாளை நடக்கிறது. அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பு திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது.இதன்படி பெரம்பலூர் தாலுகாவில் கீழக்கரை கிராமம், குன்னம் தாலுகாவில் பென்னகோணம் (வடக்கு) கிராமம், வேப்பந்தட்டை தாலுகாவில் பூலாம்பாடி (கிழக்கு) கிராமம், ஆலத்தூர் தாலுகாவில் நாட்டார்மங்கலம் கிராமம் என 4 கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம்கள் நாளை நடக்கிறது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான இந்த முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : project camp ,Kilakarai village ,
× RELATED நீலகிாியில் 6 வட்டங்களில் 20ம் தேதி சிறப்பு திட்ட முகாம்