வேலாயுதம்பாளையத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கரூர், செப்.26: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்றது.வேலாயுதம்பாளையம் காவல்துறை சார்பில ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இன்ஸ்பெக்டர் வேலுசாமி துவக்கிவைத்தார். காவல்துறையினர், இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்துகொண்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர். முக்கியவீதிகள் வழியாக சென்றுகாவல் நிலையத்தை வந்தடைந்தது.பயணிகள் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது, வாகனம் ஓட்டும்போது செல்போன்பேச கூடாது. கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிந்திருக்க வேண்டும். காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது. சரக்குவாகனத்தில் அதிகபாரம் ஏற்றக்கூடாது. இரவுநேரங்களில் கனரக வாகனங்களை பாதுகாப்பில்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது. குடிபோதையில் வாகனத்தை ஓட்டக்கூடாது, உள்ளிட்ட ஆலோசனைகளை எடுத்துக்கூறினர்.பேரணியில் எஸ்ஐக்கள் அருள்செல்வன், நெடுஞ்செழியன் மற்றும் போலீசார், இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>