×

கரூர் வெங்கமேடு குறுகிய சந்து பாதையில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

கரூர், செப். 26: கரூர் வெங்கமேட்டில் மூன்று தெரு மக்கள் பயன்படுத்தி வரும் குறுகிய சந்து பாதையில் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட உட்புற பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் அடுத்தடுத்து உள்ளன. இதில், உட்புற பகுதியில் கட்டபொம்மன் தெரு, பூசாரி கவுண்டர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு ஆகிய மூன்று தெருக்களில் வசிக்கும் மக்கள், குளத்துப்பாளையம், உழவர் சந்தை, மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்காக குறுகிய சந்து பகுதியை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். சிமென்ட் சாலையாக இருந்த இந்த குறுக்குச் சந்து பகுதி தற்போது நடந்து செல்லக் கூட முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், இரண்டு சக்கர வாகனங்களும் எளிதாக செல்ல முடியாத நிலைதான் இங்கு நிலவி வருகிறது. எனவே, மூன்று தெருக்கள் இணையும் இந்த குறுக்குச் சந்து பகுதியை விரிவாக்கம் செய்யும் வகையில், சீரமைத்து, புதிதாக சிமென்ட் சாலை போட்வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே, பகுதி மக்களின் நலன் கருதி, அதிகாரிகள் இந்த பகுதியில் சிமென்ட் சாலை கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cement road ,lane ,Karur Venkamedu ,
× RELATED நாட்றம்பள்ளியில் தேசிய...