தமிழ்நாடு காகித ஆலை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கரூர், செப். 26: தமிழ்நாடு காகித ஆலை சார்பில் இலவச மருத்துவ முகாம் 8 கிராமங்களில் நடைபெற்றது.தமிழ்நாடு காகித ஆலை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஒனவாக்கால்மேடு, நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதூர், குறுக்குப்பாளையம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு 207 நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள், ஆலோசனைகள் வழங்கினர். இதில் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்  பங்கேற்று பயனடைந்தனர்.

Tags : Free Medical Camp ,Paper Mill ,Tamil Nadu ,
× RELATED இலவச மருத்துவ முகாம்