கடவூர் பெருமாள் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையை சரி செய்ய வேண்டும் பக்தர்கள் கோரிக்கை

கடவூர், செப்.26: கடவூர் முஸ்டக்குட்டப் பெருமாள் கோயில் செல்லும் மலைப்பாதையை சரி செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடவூர் ஒன்றியத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற முஸ்டக்குட்டப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பக்தர்கள் சுமார் 1 கி.மீ. மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமை அன்று கடவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரும்பாலான பக்தர்கள் இந்த கோயிலில் உள்ள பெருமாளை தரிசிக்க வருவார்கள். அப்பொழுது அன்னதானம், நேர்த்தி கடன் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த கோயிலுக்கு செல்லும் பாதை கரடுமுரடான மற்றும் கற்கள் இருப்பதால் பக்தர்கள் மற்றும் சிறு குழந்தைகள் இந்த மலையில் ஏறுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பக்தர்கள் வசதிக்காக இந்த மலைப்பாதையில் உள்ள கற்களை பணியாளர்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும்.கரடுமுரடான இந்த கற்களை அகற்றினாலே அதிகப்படியான பக்தர்கள் இந்த பெருமாளை தரிசிக்க வருவார்கள். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Tags : Devotees ,Kadavur Perumal Temple ,
× RELATED துவங்கியது ஐயப்ப பக்தர்கள் சீசன் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு அலறுது பழநி