×

முக்கூடலில் அதிமுக பொதுக்கூட்டம்

பாப்பாக்குடி, செப். 26: நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், முக்கூடல் காந்தி மைதானத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் வீரபாண்டி, பாசறை செயலாளர் சேர்மபாண்டியன், ஆலங்குளம்  ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், அரிவேல்ராஜன், அமல்ராஜ், பொதுக்குழு  உறுப்பினர் பாண்டியராஜன், பேரூர் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஜெயராமன்,  ஆழ்வார் சங்கர், பாப்பாக்குடி ஒன்றிய சார்பு அணி செயலாளர் கள்  தங்கப்பாண்டியன், வெள்ளப்பாண்டியன், சேர்மன் ராஜா, தளபதி பிரேம்குமார்,  கனகராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கூடல் பேரூர் செயலாளர் மரியஜேசையா வரவேற்றார். மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராஜ்சத்யன், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், மாநில பேச்சாளர்கள் சிவகாசி சின்னத்தம்பி, தஞ்சை தனசேகரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் வேலாயுதம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அப்பாஸ், பேரூர் அவைத்தலைவர் சவரிமுத்து, மைலப்புரம் சேவியர் ரஜினி மற்றும் வார்டு செயலாளர்கள், ஒன்றிய இணை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,General Meeting ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...