×

குற்றாலத்தில் 6 இடங்களில் பெயர் பலகை 125 இடங்களில் தெருவிளக்கு

தென்காசி, செப். 26: குற்றாலத்தில் சுற்றுலா துறை சார்பில் 6 இடங்களில் அறிவிப்பு பலகை மற்றும் 125 தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது.ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் 400 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் சுற்றுலா தலங்களில் பல்வேறு அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலா தலமான குற்றாலத்தில், 6 இடங்களில் அறிவிப்பு பலகைகள் மற்றும் 125 எல்இடி தெரு விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தூர அறிவிப்பு பலகைகளின் மூலம் குற்றாலத்தில் இருந்து அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள் எத்தனை கி.மீ. தொலைவில் உள்ளது என்பதையும் சுற்றுலாப்பயணிகள் அறிந்து கொள்ளலாம்.

Tags : Name Board ,locations ,Courtallam ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு