ஜார்ஜ் நகரில் ரேஷன் கடை இன்பதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

திசையன்விளை, செப். 26: குட்டம் ஊராட்சிக்குட்பட்ட பெரியதாழை ஜார்ஜ் நகரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இன்பதுரை எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அந்தோனி அமலராஜா, வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் முருகேசன், நகர ஜெ பேரவை செயலாளர் ஜெயக்குமார், நவ்வலடி சரவணகுமார், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் உவரி ரமேஷ், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் அந்தோனி அருள்புனிதன், துணை தலைவர் எட்வர்ட்சிங், திசையன்விளை நகர செயலாளர் சுடலைமணி, கூடங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், வள்ளியூர் நகர துணை செயலாளர் கல்யாணசுந்தரம், நவ்வலடி பாலன், விஜயாபதி நேவிசன் லியோன், துரைசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>