×

கல்லிடைக்குறிச்சியில் திருக்குர்ஆன் மாநாடு

அம்பை, செப். 26: கல்லிடைக்குறிச்சியில் நகர உலமாக்கள், ரஹ்மத் ஜூம்ஆ மஸ்ஜித்  சார்பில் திருக்குர்ஆன் மாநாடு நடந்தது. இதில் துஆ மஜ்லிஸ், சிறப்பு கருத்தரங்கம், வளரும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
சிறப்பு துஆ நிகழ்ச்சிக்கு நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரி பேராசிரியர் முகைதீன் அப்துல் காதர் தலைமை வகித்தார். பள்ளியின் துணை இமாம் தாஜுதீன் முகம்மதி கிராஅத்  ஓதினார். வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல்காதிர்பாகவி சிறப்பு துஆ ஓதினார். ‘‘அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்’’  என்ற தலைப்பில் நடந்த  கருத்தரங்கில் கும்பகோணம் காஜியார் பள்ளிவாசல் இமாம் ஷேக்முஜிபுர் ரஹ்மான் அறிமுக உரையாற்றினார். மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி பேராசிரியர் முஹம்மது இல்யாஸ் உஸ்மானி நடுவராக செயல்பட்டார். தொடர்ந்து நடந்த மாநாட்டிற்கு கும்பகோணம் காஜியார் பள்ளிவாசல் தலைமை இமாம்  மஸ்தான் தலைமை  வகித்தார். ஜமாஅத் தலைவர் நாகூர் முகைதீன், துணை தலைவர் ஷம்சுதீன், பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அப்துல் மஜீத், அம்பை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலர் அப்துல் ஜப்பார், பொருளாளர் பக்ருதீன் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாஅத்  செயலாளர் ஷாகுல் ஹுசைன் வரவேற்றார்.

மாநாட்டில் சென்னை குராஸானி  பீர் மஸ்ஜித் தலைமை இமாம் சதீதுத்தீன், நூருல் ஹிதாயா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் ஜாகீர் உசைன்  பாஜில், சென்னை  மஸ்ஜித்  ரஹீமா பள்ளிவாசல் தலைமை இமாம் ஸதக்கத்துல்லா பாகவி  ஆகியோர் பேசினர்.
அம்பை முஹைதீன் ஜும்ஆ பள்ளி தலைமை இமாம் பீர் முகம்மது, களக்காடு டாக்டர் ஆதம் ஷேக் அலி  ஆகியோர் வளரும் சாதனையாளர்களுக்கு  விருது வழங்கி கவுரவித்தனர். மாநாட்டில் கல்லிடை நகர இமாம்கள் அஹமது மைதீன், அப்துல் ரஹ்மான், முஹம்மது இத்ரீஸ், நூருல் அமீன், உமர் மைதீன், தாஜுதீன் மற்றும் உலமா பெருமக்கள், அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, வி.கே.புரம், பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Tags : Holy Quran Conference ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது