×

ஐகோர்ட் தீர்ப்பின்படி திருமண மண்டபத்திற்கு சீல்வைப்பு

கறம்பக்குடி, செப்.26: கறம்பக்குடியில் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்திய திருமண மண்டபத்திற்கு ஐகோர்ட் தீர்ப்பின்படி அதிகாரிகள் சீல் வைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பகுதி யின் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. குடியிருப்பு பகுதியில் இந்த திருமண மண்டபம் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு அதிக தொந்தரவு ஏற்படுகிறது. மேலும், முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்த திருமண மண்டபம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக கூறி கறம்பக்குடி மஹாத்மா காந்தி விழிப்புணர்வு நல சங்க தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான மாரிக்கண்ணு என்பவர் கடந்த 2015ம் ஆண்டு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் தீர்ப்பின்படியும், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் மண்டபத்தின் உரிமை யாளர் மண்டபத்திற்கு பூட்டு போட்டு போட்டி சாவியை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதன் பிறகு நேற்று மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி கறம்பக்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட் மற்றும் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் அலுவலர்கள் திருமண மண்டபத்திற்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : wedding hall ,
× RELATED இப்தார் நோன்பு திறப்பு