கறம்பக்குடி பகுதியில் ஆடு திருட முயன்றவர் கைது

கறம்பக்குடி, செப்.26: கறம்பக்குடியில் ஆடு திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெக்கிகாடு பகுதி கீழ தெருவை சேர்ந்தவர் மாதவகிருஷ்ணன். நேற்று இரவு வாசலில் கட்டி போட்டியிருந்த இவரது ஆடுகள் சத்தம் போடுவதை கண்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு ஆட்டை மர்ம நபர் ஒருவர் தூக்கி செல்வதை கண்டு ஓடி சென்று அந்த நபரை மடக்கி பிடித்தார். பின்னர் இதுகுறித்து கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்து, போலீசில் அவரை ஒப்படைத்தார். விசாரணையில் கறம்பக்குடி இடையாத்தி வெளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : area ,Karambakkudy ,
× RELATED ஆந்த்ராக்ஸ் தாக்கி 110 ஆடுகள் பலி