×

இலவச தையல் பயிற்சி துவக்க விழா

ஸ்பிக்நகர், செப்.26: பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அபிராமி நகர் முத்தையாபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வேலைவாய்ப்பற்ற ஆண்கள் பெண்களை கண்டறிந்து, இதுவரை 180 விதமான இலவச தொழில் பயிற்சிகளை வழங்கியுள்ளது. 181வது பயிற்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 30 வேலைவாய்ப்பற்ற பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு 30 நாள் இலவச தையல் பயிற்சி நடைபெற உள்ளது இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பாரத ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளர் சந்தோஷ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சுயதொழிலில் முக்கியதுவத்தையும் பெண்களின் முன்னேற்றம் பற்றியும் ஊக்கபடுத்தினார். பயிற்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் துரைசாமி முன்னிலை வகித்தார். விழாவில் பயிற்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், அலுவலக உதவியாளர் மேரிகவிதா மற்றும் தையல் ஆசிரியை அந்தோணியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.Tags : Sewing Training Opening Ceremony ,
× RELATED தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி