×

வெளியூர் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க கூடாது போலீசார் எச்சரிக்கை

தூத்துக்குடி,செப்.26: வெளியூர் குற்றவாளிகளுக்கு உள்ளூரில் அடைக்கலம் கொடுக்க கூடாது என முறப்பநாடு போலீசார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன், உத்தரவின் பேரில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு ஆலோசனைக் கூட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமை வகித்தார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த இருதரப்பினரும் சுமார் 30 பேருக்கு மேல் பங்கேற்றனர்.  கூட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையுடன் செயல்படவேண்டும், எந்தவொரு சிறிய பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக காவல் நிலையத்திற்கு அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும், இளைய சமுதாயத்தை நல்வழிபடுத்துவோம், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறும், வெளியூர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இங்கு வருவோருக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது.

சந்தேகப்படும் வகையில் யாராவது அந்நியர் கிராமத்திற்குள் வந்தால், அவர்களை பற்றிய தகவல்களை காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். யாரும் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது, போதைப்பொருள் குறித்து ஏதேனும் தெரிந்தால் தெரிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கிராமங்களில் விழாக்களுக்கு போலீஸ் அதிகாரிகளை அழைத்தால், அதில் கட்டாயமாக நாங்கள் கலந்து கொள்வோம், இனி உயிரிழப்பு ஏற்படக்கூடாது. அனைவரும் காவல் நிலையம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் செல்போன் எண்களை வைத்துக்கொள்ளுமாறும், பிரச்னைகள் ஏற்படும் போது உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் காவல் துறையினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : outsiders ,
× RELATED பாஜ தலைவர்களை வெளியாட்கள் எனக் கூறி...