×

தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட கழிவு நீரோடை பணிகள் மறியல் போராட்டம் நடத்த முடிவு

தூத்துக்குடி, செப்.26: தூத்துக்குடியில் கழிவுநீர் ஓடைக்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் வெளியே வரமுடியாமல் சிரமப்படுகின்றனர். இதை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது கழிவுநீர் ஓடை இல்லாத தெருக்களில் புதியதாக கழிவு நீரோடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தூத்துக்குடி போல்டன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் ஓடை அமைக்க திட்டமிடப்பட்டு, அங்கு ஜேசிபி மூலம் வீடுகளை ஓட்டி நீளமான குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகள் தோண்டப்பட்டதால் வீடுகளுக்குள் டூவீர்களை கொண்டு செல்ல முடியாமலும், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.ஒருவார காலத்திற்கும் மேலாகியும் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிகள் துவங்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த குழிகளில் கழிவுநீர், மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் தெரிவித்தும் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி துவங்கப்படவில்லை. இதன்காரணமாக அப்பகுதி பொதுமக்கள் இன்று திரண்டு திருச்செந்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Tuticorin ,picketing ,Boltanpuram ,
× RELATED ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட...