×

உதவித்தொகை பெறுபவர்கள் நாளை போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் முதுநிலை மேலாளர் தகவல்

தூத்துக்குடி,செப்.26: தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகையை சுமார் 60 ஆயிரம் பேர் பெறுகின்றனர். இதில் 3 ஆயிரம் பேர் 80 வயதுக்கு மேலானவர்கள். இவர்கள் வங்கிகளுக்கு சென்று பணத்தை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி, அதன் மூலம் உதவித்தொகையை தபால்காரர்கள் நேரடியாக வீட்டில் சென்று வழங்குவதற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட, உதவித்தொகை பெறுபவர்கள் நாளை (27ம்தேதி) மாவட்ட தலைமை தபால் அலுவலகம், துணை தபால் அலுவலகங்கள், கிராமப்புற கிளை தபால் அலுவலகங்களுக்கு ஆதார் அட்டை, செல்போன் எண் ஆகியவற்றுடன் சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.  முதியவர்கள் வங்கி கணக்கை தொடங்கி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட தபால் கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி முதுநிலை மேலாளர் பிரான்சிஸ் சேவியர் ெதரிவித்துள்ளனர்.


Tags : Recipients ,
× RELATED குளித்தலை உட்கோட்டத்தில் காவலர்...