×

வெங்கட்ராமானுஜபுரம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

உடன்குடி, செப்.26: வெங்கட்ராமானுஜபுரம் முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவையொட்டி 108திருவிளக்கு பூஜை நடந்தது. கோயில் கொடைவிழா கடந்த 22ம்தேதி காலை 6மணிக்கு கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சமயசொற்பொழிவு, அன்னதானம், வில்லிசை, கும்பம் தெருவீதி வருதல், முளைப்பாரியுடன் கும்பம் தெரு வீதிவருதல், மஞ்சள்நீராடுதல், படைகஞ்சி ஏற்றுதல், பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 24ம்தேதி இரவு 8.30மணிக்கு 108திருவிளக்கு வழிபாடுநடந்தது.     ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பகவதிபாண்டி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : pooja ,Venkatramanujapuram temple ,
× RELATED வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்