×

தூத்துக்குடி கணேஷ் நகரில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம் நிர்வாக அதிகாரி தகவல்

தூத்துக்குடி, செப். 26: தூத்துக்குடி கணேஷ்நகரில் உள்ள பழுதடைந்த 114 அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட உள்ளன. தூத்துக்குடி கணேஷ் நகரில்  வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு ஊழியர் அடுக்குமாடி  குடியிருப்புகள் சேதம் அடைந்து  வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. ஆபத்தான இந்த குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இதுகுறித்து திருநெல்வேலி வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பாண்டியராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள 114 அரசு அடுக்குமாடி வாடகை  குடியிருப்புகள் பழுதடைந்து, குடியிருக்க உகந்ததாக இல்லாத நிலையில் உள்ளதால் இக்கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட உள்ளன.
இப்பணிக்கு அரசுத்துறையில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் திருநெல்வேலி வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Demolition ,apartment buildings ,Thoothukudi Ganesh ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை...