×

இந்தியா பொருளாதாரத்தில் புத்துயிர் பெற்றிருக்கிறது

திருத்துறைப்பூண்டி, செப்.26: இந்தியா பொருளாதாரத்தில் புத்துயிர் பெற்றிருக்கிறது என்று பாஜ மாநில செயலாளர் புரட்சி கவிதாசன் கூறினார்.திருத்துறைப்பூண்டியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த செப்டம்பர் 20ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டார். வரலாற்றில் முதன் முறையாக 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சநிலையை மும்பை பங்கு சந்தை அடைந்தது. அதுபோல தேசியபங்கு சந்தை குறியீடும் உச்சபட்சத்தை அடைந்தது. இதன் மூலமாக இந்தியாவில் நிலவுவதாக சொல்லக் கூடிய பொருளாதார மந்தநிலை ஒரு பாய்ச்சல் வேகத்தில் முன்னிலையில் இருக்கிறது.

தொழில் வல்லுநர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், சிறு தொழில் செய்பவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் யாவரும் கவலைப்படத் தேவையில்லை. இந்தியா மந்த நிலையிலிருந்து பொருளாதாரத்தில் புத்துயிர் பெற்றிருக்கிறது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனனமான எல்ஐசியை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டுகளில் இதுவரைக்கும் எட்டாத அளவுக்கு ஏறத்தாழ ரூ.7,000 கோடி ரூபாய் ஒரு காலாண்டுக்கு லாபம் சம்பாதித்துள்ளது. எனவே பொருளாதார மந்தநிலை என்பது எதிர்கட்சிகளும், இந்த தேசத்தின் நலனில் அக்கறை இல்லாதவர்களும் கட்டிவிடக் கூடிய கட்டுக் கதையாகத்தான் இருக்கிறது. இந்திய பொருளாதாரம் சந்தேகத்து இடமில்லாமல் ஸ்திரத்தன்மையோடு இருக்கிறது என்றார்.


Tags : India ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!