×

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் புதிய பள்ளிகள் துவங்குதல் தரம் உயர்த்த ஆலோசனை

முத்துப்பேட்டை, செப்.26: முத்துப்பேட்டை ஒன்றியத்தில் நடந்த அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் புதிய பள்ளிகள் துவங்குவது குறித்து ஆலோசனை பெறப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம், முருகபாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சக்திவிநாயகம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் புதிய பள்ளி துவங்குதல், தரம் உயர்த்துதல் தொடர்பான வரைபட பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் குழந்தைகள் அருகாமை பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் அதற்கு ஏற்றவாறு பள்ளிகள் அமைந்திருக்க வேண்டும். அந்த வகையில் ஒன்றியத்தில் புதிய பள்ளிகள் துவங்குவதற்கு ஏற்கனவே உள்ள பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கும் தேவையான விபரங்கள் தலைமை ஆசிரியர்களிடம் பெறப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர் செந்தில் நன்றி கூறினார்.



Tags : meeting ,school headmasters ,schools ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...