×

காஞ்சிகுடிக்காடு அரசு விதைப்பண்ணையில் சம்பா சாகுபடிக்கு இயந்திர நடவு பணி

மன்னார்குடி, செப்.26: காஞ்சிகுடிக்காடு அரசு விதைப்பண்ணையில் சம்பா சாகுபடிக்கு இயந்திர நடவு பணியை நீடா வேளாண்மை உதவி இயக்குநர் துவக்கி வைத்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காஞ்சிகுடிக்காடு அரசு விதைப் பண்ணையில் சம்பா சாகுபடிக்கு இயந்திர நடவு பணியை நீடாமங்கலம், வேளாண்மை உதவி இயக்குநர் தேவேந்திரன் துவக்கி வைத்து விதை பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த விதைப்பண்ணையில் 9 ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடியும், 35 ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், உளுந்து, பயறு மற்றும் எள் போன்ற பயிர்களும் சேர்த்து மூன்று போகமும் விளையக்கூடிய பண்ணையாக உள்ளது. ஆராய்ச்சி மையங்களில் இருந்து வல்லுநர் விதைகள் பெறப்பட்டு இங்கு ஆதாரநிலை விதையாக உற்பத்தி செய்து, நெல் சுத்திகரிப்பு செய்த பின், விதை சான்று பணி மேற்கொண்டு அரசு சான்று பெற்ற விதையாக வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்கப் படுகிறது.இந்நிலையில் சம்பா பருவம் தொடங்கியதை அடுத்து விவசாயிகளுக்கு முன்னோடியாக மன்னார்குடி அருகே உள்ள காஞ்சிக்குடிகாடு அரசு விதைப் பண்ணையில் சிஆர்1009 சப் 1 என்ற ரகத்தின் நடவு செய்யும் பணியை வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன் நேற்று துவக்கி வைத்தார்.மேலும், மத்திய நெல் ரகங்களான கோஆர் 50, என்எல்ஆர் 34449 நெல் நாற்றங்கால்களை பார்வையிட்ட பின், தாளடி சாகுபடிக்கு கோ 51 நெல் ரக விதைப்பு பணியினை பாய் நாற்றங்கால் மூலம் துவக்கி வைத்தார். வேளாண்மை அலுவலர் (பண்ணை நிர்வாகம்) ராஜகுரு உடனிருந்தார்.


Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...