×

சென்னையில் 29ம்தேதி கூடுகிறது பிரதமரின் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

நீடாமங்கலம், செப்.26: பிரதமரின் ஓய்வூதிய திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: பிரத மந்திரியின் ஓய்வூதிய திட்டமானது நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உழைக்கும் விவசாயிகள் தள்ளாத வயதில் தன் கடைசி காலம் வரை யாரையும் நம்பி இருக்காமல் தனக்காக தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்கு மாதம் ரூ.3,000 வீதம் மத்திய அரசின் பங்களிப்போடு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் முதுமை காலத்தில் மகிழ்வோடும், ன்னம்பிக்கையோடும் சுயமதிப்புடனும் வாழ வழிவகை செய்யும் திட்டமாகும். விவசாய தொழில் செய்பவர் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெறும் தகுதியுடையவர் ஆவார். வயது வரம்பு 18 முதல்40 வயது வரை உள்ள சிறு குறு விவசாயிகள் மட்டுமே திட்டத்தில் இணைய முடியும்.

விவசாயிகள் தங்கள் வயதிற்கு ஏற்ப மாதந்தோரும் தொடக்கத்தில் கட்டும் ரூ.55 முதல் ரூ.200 வரை நிர்ணயம் செய்யப்பட்டள்ள வயதுக்கு ஏற்ப பிரீமியம் தொகையை 60 வயது வரை செலுத்த வேண்டும். சந்தாதாரர் மனைவியும் இத்திட்ட முறையில் இணைந்து பலன்களை பெறலாம். சந்தாதாரர் திட்ட காலத்திற்கு பிறகு இறக்கும் பட்சத்தில் அவரின் மனைவி அல்லது வாரிசு தாரருக்கு திட்ட ஓய்வூதிய பலனில் 50 சதம் மாதம் ரூ.1500 இறுதிகாலம் வரை வாங்கலாம். தவணைதொகையினை மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடத்திற்கு ஒருமுறை என செலுத்தலாம். அரசுக்கு வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது. தேவையான ஆவணங்களான ஆதார் நகல், (பிறந்த தேதி, மாதம், வருடம் இருக்க வேண்டும்.) வாரிசுதாரரின் ஆதார் அட்டை (பிறந்த தேதி,மாதம்,வருடம்இருக்க வேண்டும்.) வங்கி கணக்கு புத்தகம்(ஐ.எப்.எஸ்சிகோடு உள்ள ஏதேனும் ஒரு வங்கி கணக்கு புத்தகம்) போன்ற ஆவணங்களை பயன்படுத்தி இத்திட்டத்தில் சேரலாம் என்றார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு