சமாதான கூட்டத்தில் உடன்பாடு நேரடி நெல் விதைப்பில் களையை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

திருத்துறைப்பூண்டி, செப்.26:
திருத்துறைப்பூண்டி வட்டார பகுதிகளில் நேரடி நெல் விதைப்பில் களையை கட்டுப்படுத்த வேளான்மை உதவி இயக்குனர் சாமிநாதன் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது : நேரடி நெல் விதைப்பில் களையை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குதிரைவாலி, அருகம்புல், வட்டக்கோரை, எருமை புல், வழுக்கை புல், பூண்டு வகை களைகள், ஆலக்கீரை மற்றும் நண்டுகால்புல் முதலிய களைகள் பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இக்களைகளை கட்டுப்படுத்த நெல் முளைத்த 21ம் நாள் வயலில் நல்லஈரம் உள்ள நிலையில் களைக் கொல்லி தெளித்தால் நல்லபலன் கிடைக்கும். பிஸ்பேரிக் பேக்சோடியம் (நாமினி கோல்டு ) 100 மிலி மற்றும் பினாக்ஸி புரோப்பி ஈதைல் 200 மிலி இரண்டையும் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்கள் நனையுமாறு ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். நல்லபயன் தரும். களைக் கொல்லி தெளித்தபின் வயலில் பயிர் மூழ்கும்படி நீர் தேக்கி வைத்து ஒரு நாள் கழித்து நீரை வடிய வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் களை கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகமாக கிடைக்கும் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளர்.


Tags : Peace Meeting ,
× RELATED கொள்ளிடம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப் பள்ளி