×

வலங்கைமான் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஏழரைபவுன் தாலி செயின் பறிப்பு

வலங்கைமான், செப்.26: வலங்கைமான் அடுத்த நல்லூர் கிராமத்தில் தாய் வீட்டிற்கு வந்தபோது இரவில் படுத்துஉறங்கிய பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை மர்ம நபர் பறித்துச் சென்றார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் மனோகரன், சந்திரமோகன். சகோதரர்களான இருவரும் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மனோகரனின் மகள் உஷா கும்பகோணம் அடுத்த அணக்கரையில் உள்ள தனது கணவர் வீட்டிலிருந்து மகனின் காலாண்டு விடுமுறைக்காக நல்லூரில் உள்ள தாயார் வீட்டிற்கு நேற்று முன்தினம் மகனுடன் வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு சந்திரமோகன் மற்றும் மனோகரன் குடும்பத்தை சேர்ந்த உஷா உட்பட எட்டு பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு உஷாவின் கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர் அறுத்துக்கொண்டு ஓடுவதை கண்டு கூச்சலிட்டார்.

அதற்குள் மர்ம நபர் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி ஓடிவிட்டான். தகவலறிந்ததும் இச்சம்பவ இடத்திற்கு நன்னிலம் டி.எஸ்.பி முத்தமிழ்சல்வன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் ஸ்டெபி வரவழைக்கப்ட்டு துப்பு துலக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மெயின்ரோடு வரை மோப்பநாய் சென்று பின்னர் திரும்பியது. திருவாரூர் தடயவியல் டிஎஸ்பி சரவணன் தடயங்களை சேகரித்தார். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகனின் விடுமுறைக்காக தாயார் வீட்டிற்கு வந்தபோது நகை திருட்டுபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மர்ம நபர் துணிகரம்500 வீரர்களுக்கு 10 நாட்கள் பயிற்சிதனிநபர் ஒழுக்கம், தலைமை பண்பு, தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு, நீர் மேலாண்மை, நதிநீர் தூய்மை, பேரிடர் மீட்பு பணிகள் ஆகியவை குறித்து என்சிசி பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு பயிற்சியளிக்கின்றனர்.

Tags : home ,Valangaiman ,
× RELATED அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக...