×

திருவாரூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்கூட்டம் அக்டோபர் 25ல் நடக்கிறது

திருவாரூர், செப்.26:இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் அடுத்த மாதம் 25ம்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி மாவட்டத்தில் இயங்கி வரும் கருவூல அலுவலகங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் அது தொடர்பான மனுக்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), கலெக்டர் அலுவலகம், திருவாரூர் என்ற முகவரிக்கு விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (தொலைபேசி, அலைபேசி எண்ணுடன்) மற்றும் ஓய்வூதிய புத்தக எண், இறுதியாக பணிபுரிந்த அலுவலகம் மற்றும் பதவி ஓய்வு பெற்ற நாள், கோரிக்கைகள் எந்த அலுவலரிடம் எவ்வளவு நாட்களாக நிலுவையில் உள்ளது. கருவூலத்தின் பெயர் போன்ற விவரங்களுடன் இரட்டை பிரதிகளில் அடுத்த மாதம் 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறுவோர் தொடர்புடைய மாவட்டத்தில் நடைபெறும் ஓய்வூதிய குறை தீர்க்கும் கூட்டத்தில் வழியாக தான் தீர்வு காண வேண்டும். மேலும் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் தங்களது விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பாமல் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.Tags : Pensioners' Oversight Meeting ,Thiruvarur District ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடல்