சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மன்னார்குடி, செப்.26: கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரன் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணவு நிகழ்ச்சிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை அருகில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தலைமை மருத்துவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். முகாமின் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் அருண்குமார் எடுத்துக்கூறினார்.இம்முகாமில் பள்ளி மாணவர்கள் ஏடிஎஸ் கொசு போல் வேடமிட்டும், டெங்கு தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கூத்தாநல்லூர் வர்த்தகர் சங்க தலைவர் ரவிச்சந்திரன், டைம்கிட்ஸ் பள்ளி தாளாளர் அண்ணாமலை ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.


Tags : Dengue Prevention Awareness Camp ,
× RELATED இஎஸ்ஐசி சார்பில் குறைதீர் கூட்டம்: 11ம் தேதி நடக்கிறது