×

துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி

நாகை, செப்.26: சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரகம் சார்பில் நாகை, வேதாரண்யம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி நாகையில் நேற்று தொடங்கியது.நாகை நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பயிற்சியை தொடங்கி வைத்தார். பொறியாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். துப்புரவு ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், அரசகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திடக் கழிவுகளின் உற்பத்தி அளவு ஆண்டிற்கு 5 விழுக்காடு அதிகரிக்கிறது. நமது நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு தனிநபர் 110 கிராம் கழிவுகளை உண்டாக்குகின்றனர். இவ்வாறு உற்பத்தியாகும் கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் சிறுநீர் மற்றும் மலம் உள்ளிட்ட மனித கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கான வசதிகள் மற்றும் வழிமுறைகளை வழங்கியுள்ளது. உணவு விடுதிகளில் சேரும் குப்பைகளை கவனமுடன் அகற்ற வேண்டும். மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீல நிற தொட்டிகளிலும், அபாயகரமான குப்பைகளை கருப்பு நிற தொட்டியிலும் போட வேண்டும். துப்புரவு பணியாளர்கள் திடக்கழிவுகளை கவனமாகவும், பாதுகாப்புடன் கையாள வேண்டும் என்பது குறித்து நேற்றும் (25ம் தேதி), இன்றும் (26ம் தேதி) இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் நாகை, வேதாரண்யம் நகராட்சியில் இருந்து 180 பேர் பயிற்சி பெறுகின்றனர். திருவாரூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன், செவிலியர் ரேவதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...