×

வேதாரண்யத்தில் பாரம்பரிய உணவு கண்காட்சி

வேதாரண்யம், செப்.26: வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து உணவு பற்றிய விளக்க கண்காட்சியும் பாரம்பாpய உணவு கண்காட்சியும் நடைபெற்றது.கண்காட்சியை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கல்யாணி துவக்கி வைத்தார். நிகழ்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, வட்டார உதவி ஒருங்கிணைப்பாளர் சித்ரா, மேற்பார்வையாளர் ராணி மற்றும் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ரோட்டர் சங்க தலைவர் கருணாநிதி, செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் சிறுதானியங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் ஊட்டச்சத்து தரும் பொருட்கள் மற்றும் பாரம்பரிய கேழ்வரகு, கம்பு, சோளம், எள் கொள்ளு, பயறு, திணை உள்ளிட்ட நவதாணியங்களில் தயாரித்த பலகாரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.கண்காட்சியில் ஊட்டசத்து குழுமத்தின் கருவுற்ற பெண்கள், வளர் இளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுடன் காணப்படும் ஊட்டசத்து குறைபாட்டை போக்குவதை குறித்தும், சத்தான பாரம்பரியமான உணவு வகை குறித்தும் விளக்கப்பட்டது. கண்காட்சியினை கருவுற்ற பெண்கள் மற்றும் ஏராளமான கிராம வாசிகள் கண்டு பயனடைந்தனர்.


Tags : Food Exhibition ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்...