×

திடீர் பள்ளத்தால் போக்குவரத்து மாற்றம் மறையூர் கிராமத்தில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது பிடிஓவை கண்டித்து சாலைமறியல் வாய்க்காலை தூர்வாராததால் ஆத்திரம்

மயிலாடுதுறை செப்.26: மயிலாடுதுறை அருகே குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் வாய்க்காலை தூர்வாரத பிடிஓவை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மறையூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கோவங்குடி மற்றும் மறையூர் வடிக்கால் வாய்கால்களை தூர்வாராததாலும், ஆக்கிரமிப்பை அகற்றாததாலும் தற்போது பெய்த மழைநீர் கடந்த ஒருவார காலமாக குடியிருப்பை சுற்றி தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறை பிடிஓ மற்றும் வருவாய்த்துறையினரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறையூர் மெயின் ரோட்டில் அரசு பேருந்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி வெள்ளத்துரை மற்றும் மயிடுதுறை தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெறும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மறையூர் இருந்து மயிலாடுதுறை சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags : change ,areas ,village ,PDO ,
× RELATED பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை...