×

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் 13வது முறையாக உடைப்பு

மயிலாடுதுறை, செப்.26: மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் பாதாள சாக்கடை குழாய் 13வது முறையாக உடைந்து சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு பாதாளசாக்கடை திட்டம் ரூ.42 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பிரதான குழாய்கள் மூலம் ஆறுபாதி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும் என்ற திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் சுத்திரிக்கப்பட இல்லை. அதை வைத்து புல் வளர்க்கும் திட்டமும் பாழானது. 36 வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் சேரும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்புவதற்காக 8 இடங்களில் பம்பிங்க் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு கச்சேரிசாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென்று சாலையில் பள்ளம் ஏற்பட்டது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் கசிந்து மண் அறிப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியது தெரியவந்தது. மாயூரநாதரர் வடக்குவீதி, நகராட்சி அலுவலகம் எதிரில், கிளை சிறைச்சாலை அருகில், டபீர்தெரு, கொத்தத்தெரு என்று 12க்கும் மேற்பட்ட இடங்களில் திடீரென்று சாலையில் பள்ளம் ஏற்பட்டு அவ்வப்பொழுது சரிசெய்யப்பட்டு வந்தாலும், தரங்கை சாலையில் வேலை இன்னும் முடியாத நிலையில் நேற்று மயிலாடுதுயை-திருவாரூர் சாலை கண்ணாரத்தெரு பகுதியில் சாலை திடீரென்று உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டது.

உடனே போக்குவரத்து காவல்துறையினர் கண்ணாரத்தெரு வழியாக பஸ் போக்குவரத்தை தடைசெய்து மாற்றுவழியில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். மயிலாடுதுறை பாதாள சாக்கடைத்திட்டமானது 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் கழிவுநீர் செல்லும் பைப் அனைத்தும் செரித்து ஆங்காங்கே வெடித்து அதன் வழியாக மண் உள்ளே புகுந்து கழிவுநீருடன் மண்ணும் செல்கிறது, இதனால் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் உள்ள இரண்டு சுத்திகரிப்பு குளங்களில் ஒன்று மண்ணால் தூர்ந்து மூடும் அளவிற்கு வந்துவிட்டது, உடனடியாக முக்கிய சாலைகளில் உள்ள பாதாள சாக்கடைத்திட்டத்தில் உள்ள அனைத்து பைப்களையும் மாற்றிவிட்டு புதிய பைப் லைன் அமைத்தால்தான் இதுபோன்ற சங்கடங்களில் இருந்து தப்பிக்கலாம் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.



Tags : Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி