×

மாநகர சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி, செப்.25: திருச்சி மாநகரத்தில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். திருச்சி மாநகரம் முழுவதும் ஓட்டல் கழிவுகள் சாப்பிட வரும் கால்நடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஒட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி மாநகரின் ரயில் நிலையம், மத்திய பஸ் நிலையம், தீரன் நகர், கருமண்டபம் உள்பட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. இந்த இடங்களில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் ஓட்டல் கழிவுகள் பழக்கழிகளை ஆகியவற்றை சாப்பிட வரும் மாடுகள் ஆங்காங்கே நடந்து செல்கிறது. இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை.

மேலும் வாகனங்கள் ஓலி எடுப்புவதினால் மாடுகள் மிரண்டு ஓடியும் வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். சில நேரங்களில் சாலையில் படுத்து அவைகள் இளைப்பாறுகின்றன. இதனால் விலகி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மாடுகளை வளர்க்கும் உரிமையாளர் மாடுகளை கட்டி வைத்து பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி நிர்வாகம் மாடுகளை பறிமுதல் செய்து மாடு வளர்க்கும் உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்க வேண்டுமென வாகனஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...