×

செட்டிக்குளத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாடாலூர்,செப் 25: ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் செட்டிக்குளத்தில் நடைபெற்றது.விழாவிற்கு ஆலத்தூர்ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குன்னம் ராசேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் சோமு மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான வழக்கறிஞர் துரை முகாமை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவிசந்திரன், பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் பங்கேற்றனர். திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களாய் இணைந்தனர்.

Tags : DMK Youth Membership Admission Camp ,Chettikulam ,
× RELATED சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்ட...