×

குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்

பெரம்பலூர்,செப்.25: அன்னமங்கலம் ஊராட்சி முக மதுபட்டிணம்-கிருஷ்ணா புரம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மழைநீர் தே்ங்கி நிற்கிறது .இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அன்னமங்கலம் ஊராட்சி க்கு உட்பட்ட முகமது பட்டிணம் கிராமத்திலிருந்து, வெங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்திற்குச் செல்லும் சாலை யில் முதல் ஒரு கிமீ சாலை புதி தாக போடப்பட்டதாகும். இந்தச் சாலை புதிதாகப் போடப்பட்டு சில மாதங்கள் கூட ஆகவில்லை எனக் கூறப்படுகிறது.வேப்பந்தட்டை, தழுதாழை பகுதிகளில் கடந்த 2வாரங் களாக தொடர்ந்து தென் மேற்குப் பருவமழை பெய் து வருகிறது. மிதமான மழைக்குக் கூட தாக்குப் பிடிக்காத இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக இருந்ததால் அதில் தொடர் ந்து பெய்து வரும் மழைநீர் தேங்கி திடீர் குளங்கள் போல் காட்சியளிக்கிறது.

இந்த ஊரின் அருகிலுள்ள வெங்கலம் மற்றும் தொண் டமாந்துறை ஊராட்சியில் அமைந்துள்ள கல்குவாரிக ளில், மழைமற்றும் வெயில் காலங்கள் என பாராமல் இரவும் பகலுமாக அதிக பாரங்களோடு இந்த கிராம சாலை வழியாக கருங்கற் கள், ஜல்லிக்கற்கள், அர ளைக்கற்கள், சிப்ஸ்கள் போன்றவற்றை ஏற்றிய கனரக லாரிகளே 95 சதவீ தம் செல்கின்றது. இதன் காரணமாக இந்த சாலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்று விட்டது. இத னால் சாலையைப் பயன் படுத்தும் கிராமப் பொது மக்கள் கடுமையாக அவ திப் பட்டு வருகின்றனர். எனவே சம்மந்தப்ப ட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு முகமதுப் பட்டிணம் கிராமப் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pit road ,
× RELATED தமிழ் தொலைக்காட்சியில் சமஸ்கிருத...