×

60 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுவை போராடி மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்

பெரம்பலூர், செப். 25: பெரம்பலூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து கன்றுக்குட்டியை பிரசவிக்கும் நிலையில் கால்கள் வெளியே வந்த பசுமாட்டை கன்றோடு தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
பெரம்பலூர் அடுத்த வேலூர் கிராமம் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிப்பவர் வரதராஜ் (58). இவர் தனது மனைவி மற்றும் மகன் ரவி (36) உள்ளிட்டோருடன் காட்டிலேயே குடியிருந்தவாறு அவருக்கு சொந்தமான வயலில் விவசாயம் பார்த்து வருகிறார். தனது வயலில் மாடுகள், ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.இதில் ஒரு பசுமாடு சினை மாடாக இருந்தது. நேற்று முன்தினம் அந்த பசுமாடு புல் மேய்ந்து கொண்டிருந்தபோது வரதராஜூக்கு சொந்தமான வயல் கிணற்றில் தவறி விழுந்தது. 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. தண்ணீரில் விழுந்த அதிர்ச்சியில் வயிற்றிலிருந்த கன்றுக்குட்டியின் கால் வெளியே வந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்புத்துறைக்கு ரவி தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் அதன் மாவட்ட அலுவலர் தாமோதரன் உத்தரவின்பேரில் பெரம்பலூர் நிலைய அலுவலர் முருகன் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி பசுமாட்டை கயிற்றை கட்டி மீட்டெடுத்தனர்.கிணற்றில் விழுந்தபோதே கன்று குட்டியை கால் வெளியே வந்த பசுமாடு காப்பாற்றி வெளியே கொண்டு வந்த பிறகு கன்று குட்டியை பிரசவிக்க தடுமாறி வலியால் கத்தியது. கிணற்றில் விழுந்தபோதே கால்கள் வெளியே வந்ததால் கால்நடைத்துறை மருத்துவருக்கு தகவல் தெரிவித்ததால் பசுமாடு கிணற்றிலிருந்து தீயணைப்பு துறையினரால் வெளியே தூக்கி மீட்கப்பட்ட உடனேயே தயாராக இருந்த கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்ததால் சிறிது நேரத்தில் பசுமாடு காளை கன்றுக்குட்டியை ஈன்றது.

Tags : Firefighters ,
× RELATED மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட...