கோடாலிகருப்பூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தா.பழூர், செப். 25: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தா.பழூர்- கிழக்கு ஒன்றியம் கோடாலிகருப்பூர் ஊராட்சியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் தனபால், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகைகுமரன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், சங்கர், கண்ணதாசன் ஒன்றிய மாணவரணி அணி அமைப்பாளர் ஜெயசெந்தூரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK Youth Membership Admission Camp ,
× RELATED பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை...